கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை: கோவை அருகே அடுத்தடுத்து ஏற்பட்ட மோதல் காரணமாக ஜாதிகலவரம் ஏற்படும் சூழலால் பதட்டமான நிலையில், போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை பாப்பம்பட்டி, பொன்னாக்காணி பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த பால்காரரை குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, பால்காரரின் மருமகன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர் நேற்று இரவு பால்காரரின் மகள் மற்றும் மாமியாரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இன்று அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவர் சம்பவம் குறித்துக் கேட்கச் சென்றபோது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த அவரை கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாப்பம்பட்டி, பொன்னாக்காணியில் பலத்த போலிசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது.
பால்காரர் காளியப்பகவுண்டர், அவருடைய மகள் கோகிலாமணிக்கு கால்முறிவு, மாமியார் மயிலாத்தால், மண்டை உடைந்துள்ளது.
கோகிலாமணியின் மாமன் மகன் பழனிச்சாமி, தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார். குடிபோதையில் தாக்கிய, கேசவன், அப்பா செல்வகுமார், மகன், தலைமறைவாக உள்ளனர்.