கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022: உங்கள் வார்டு வேட்பாளரை இணையத்தின் மூலம் அறியலாம் வாருங்கள்..!

நம்முடைய வார்டில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள். அவர்கள் யார் யார் என்ற கேள்விக்கு, எளிமையாக அதை தீர்ப்பதற்காகவே இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.


கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

படித்த மற்றும் படிக்காத கிராமப்புற மக்களுக்கும் பல்வேறு விதமான குழப்பங்கள் இதில் உள்ளன. நாம் மாநகராட்சியின் கீழ் வருவோமா? நகராட்சியின் கீழ் நம்முடைய வார்டு வருகிறதா? பேரூராட்சியில் நமது வார்டு இருக்கிறதா? நம்முடைய வார்டில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள். அவர்கள் யார் யார் என்ற கேள்விக்கு, எளிமையாக அதை தீர்ப்பதற்காகவே இணையதளத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

அதற்குள் சென்று நம்முடைய தொகுதி வார்டு வேட்பாளரை நாம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில், போட்டியிடுபவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை இணையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

அதில் நமது பகுதியில் யார் வேட்பாளர் என அறிய https://tnsec.tn.nic.in/candidate_view_urban2021/'லிங்க்'கை கிளிக் செய்து, அதில் மாவட்டத்தை தேர்வு செய்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர், அதில் எது தேவையோ அதை 'கிளிக்' செய்து உள்ளே நுழையலாம்.

அடுத்து பகுதியில், நம் தாலுகா மற்றும் ஊரை தேர்வு செய்து வார்டை 'கிளிக்' செய்தால், முழு விபரமும் இடம் பெறும். நாம் முழுமையாக நம் வேட்பாளர்களை அறிந்து கொள்ளலாம்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...