கோவை மாநகராட்சியில் கோழி இறைச்சி கழிவுகள் தீவனமாக மாற்றம்..!

வார நாட்களில் இந்த வாகனங்கள் மூலமாக 5 முதல் 6 டன்கள் கோழி இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 முதல் 12 டன்கள் வரை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.


கோவை: கோவையில் கோழி இறைச்சி கழிவுகளை சேகரித்து தீவனமாக மாற்றம் செய்து மாநகராட்சி சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் அதிகளவில் மாசடைந்து வருகின்றன. அதோடு திறந்த வெளிகளிலும் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதனைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி இறைச்சி கழிவுகளை சேகரிக்க இரு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சேகரிக்கப்பட்ட கோழி இறைச்சி கழிவுகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையம் மூலமாக உரிய முறையில் வீடுகளில் வளர்க்கும் பிராணிகளுக்கு உணவாகவும், தீவனமாகவும் மாற்றப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் மூலமாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

வார நாட்களில் இந்த வாகனங்கள் மூலமாக 5 முதல் 6 டன்கள் கோழி இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்படும் நிலையில், வார இறுதி நாட்களில் 10 முதல் 12 டன்கள் வரை சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

மறுசுழற்சி கட்டமைப்பு மூலமாக நாளொன்றுக்கு 7 டன்கள் வரை தீவனம் தயாரிக்கப்பட்டு தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகிறது. 7 டன் உற்பத்தியை 10 டன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...