கோவை கிணத்துக்கடவு அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது..!

கோவில்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி சீட்டை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் கிணத்துக்கடவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, கோவில்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு நபர் வெளிமாநில லாட்டரி சீட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் கோவில்பாளையம் காளியண்ணன்புதூரை சேர்ந்த வீரன் (50) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெளிமாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்த வீரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...