கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓட்டுனர் ஒருவர் பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு சென்றபோது, அங்கே வனத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று சென்றுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அடுத்த பரம்பிக்குளம் வனப்பகுதியில் புலி நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி கேரளத்தில் உள்ளது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம். இந்த புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், மான்கள் என பல்வேறு வகையான வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் கேரளாவில் அமைந்திருந்தாலும், அதற்கு தமிழகம் சேத்துமடை வழியாகவே செல்லமுடியும். பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் பகல் நேரங்களிலேயே வன உயிரினங்கள் நடமாட்டத்தை பார்க்கமுடியும்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓட்டுனர் ஒருவர் பரம்பிக்குளம் அணைப்பகுதிக்கு சென்றபோது, அங்கே வனத்தை ஒட்டிய சாலையில் புலி ஒன்று சென்றுள்ளது. அதை அவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். புலி நடமாடுவது போன்ற வீடியோ சமூக வளைதளங்களில் தற்போது பரவிவருகிறது.