கோவையில் ஆசிரியர் பணிக்கான தேர்வு 12-ம் தேதி துவக்கம்..!

வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாடவாரியாக 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


கோவை: அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை 2.6 லட்சம் பேர் எழுதுகிறார்கள். வரும் 12ம் தேதி முதல் 180 மையங்களில் கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள் பணியில் காலியாக உள்ள 2,207 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி போட்டி தேர்வு நடத்துகிறது.

வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை பாடவாரியாக 2.6 லட்சம் பேர் எழுதுகின்றனர். மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க 200க்கும் மேற்பட்ட பார்வையாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரலை காட்சி பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விவரங்களை www.trb.th.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...