குன்னூர் மலை ரயில் பாதையில் தடுப்புச்சுவர் இடிக்கும் பணி தீவிரம்..!

குன்னூர் மலை ரயில் பாதையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டு இருந்த, தடுப்பு சுவரை இடிக்கும் பணி நடந்து வருகிறது.


நீலகிரி: குன்னூர் மலை ரயில்பாதையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்டு இருந்த, தடுப்பு சுவரை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், ரயில்வே பொதுப்பணி துறை சார்பில் புதிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.

இதில், ஹில்குரோவ் ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற, ஒன்பது யானைகள், புதிய தடுப்பு சுவரால் சிரமப்பட்டன.

இந்த நிலையில், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ அறிவுறுத்தியதன் அடிப்படையில், அப்பகுதியில் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு முன், தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தலைமையில் நடத்திய ஆய்வில், யானை வழித்தடங்களில் உள்ள, மேலும் சில தடுப்பு சுவர்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, நேற்று வடுக தோட்டம் பகுதியில் இரு இடங்களில் அமைத்த தடுப்புச்சுவர்களை, ரயில்வே துறையினர் இடித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...