பொள்ளாச்சியில் குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற கடை உரிமையாளரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தமிழகத்தில் குட்கா விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை நடப்பதைக் கண்டறியச் சிறப்பு பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், காளியாபுரம் பகுதியைச் சேர்ந்த லிங்கன் (30) என்பவரது கடையில் சோதனை செய்ததில், சுமார் 8 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை கோட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனடிப்படையில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிங்கன் என்பவரைக் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...