பிரச்சாரம் செய்யும் போது, இனி ஒரு முறை கைது நடவடிக்கை மேற்கொண்டால், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன் - கோவையில் பாஜக வேலூர் இப்ராஹிம்

கோவையில் 2-வது நாளாக பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட, பாஜக வேலூர் இப்ராஹிம், தன்னை இனி ஒரு முறை கைது செய்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பிரச்சாரம் செய்யும் போது, இனி ஒரு முறை கைது நடவடிக்கை மேற்கொண்டால், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவேன் என்று பாஜகவின் சிறுபான்மை அணியின் செயலாளர், வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கோவையில் 2-வது நாளாக பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட, பாஜக வேலூர் இப்ராஹிம், தன்னை இனி ஒரு முறை கைது செய்தால் தேர்தல் ஆணையத்தில் முறையிடுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, பாஜகவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, இன்று கோவை போத்தனூர் பகுதி 95 வது வார்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு தரப்பு இஸ்லாமியர்கள், வேலூர் இப்ராஹிம் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், போலீசார் பாதுகாப்புக் கருதி, அவரை பிரச்சாரத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர்.



ஆனால், போலீசாரிடம், வேலூர் இப்ராஹிம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி ராமநாதபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று, பின்னர் மாலை வரை காவல் நிலையத்தில் வைத்திருந்து வெளியே விட்டனர்.

நேற்றும், பிரச்சாரத்தின் போது எஸ்.டி. பி.ஐ கட்சியினர் மற்றும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்று, இன்று என இரு நாட்கள் பிரச்சாரத்தின் போது போலீசார் அவரை கைது செய்து விடுவித்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய வேலூர் இப்ராஹிம், அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாகவும், 95 வது வார்டில் சிறுபான்மை மக்களை அணுகி, பாஜக சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்துள்ளது, என்பதை தெரிவித்து வாக்கு சேகரித்து அங்கு சென்றதாக தெரிவித்தார்.

ஸ்டாலின் முதல்வர் என்பதை மறந்து பாஜகவிற்கு எதிராக விஷமமாக பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்தார். பாஜகவினர் எங்கு சென்றாலும் காவல் துறையினரை வைத்து பிரசாரத்தை முடங்குகின்றனர், என்று குற்றம் சாட்டினார்.

சிறுபான்மை மக்கள் மத்தியில் பாஜகவின் திட்டங்களை தெரிவித்தால் திமுகவை புறக்கணிப்பார்கள் என்ற அச்சத்தில் பிரச்சாரத்தை தடுக்கிறார்கள் என கூறிய அவர் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இனிமேலும் நாங்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டால், தேர்தல் ஆணையத்திடம் மற்றும் மக்கள் மன்றத்திலும் முறையிடுவோம், என்று தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...