கோவை நகராட்சி பேரூராட்சிகளில் மொத்தம் 58 வேட்பு மனுக்கள் தள்ளுபடி

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகள் என மொத்தம் 58 வேட்பு மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


கோவை: நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் உள்ள நகராட்சிகள் பேரூராட்சிகள் என மொத்தம் 58 வேட்பு மனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கோவை மாவட்டத்தில், 7 நகராட்சிகளில், 198 வார்டுகளும், 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகளும் உள்ளன. நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள, 711 வார்டுகளுக்கு மொத்தம், 3,443 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. கோவையில் உள்ள, 7 நகராட்சிகளில், 30 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 1,067 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 33 பேரூராட்சிகளில், 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 2,317 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதன்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அளிக்கப்பட்ட, 3,443 மனுக்களில், 58 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 3,385 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...