1-வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஒருவரும், நான்காவது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் ஆகிய இரண்டு பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்து 50 பேரில் இரண்டு பேர் வாபஸ் பெற்றனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15- வார்டுகளுக்கு நடைபெற இருக்கிற தேர்தலுக்கு திமுக சார்பில் 18 பேரும், அதிமுக சார்பில் 15 பேரும், பாஜக சார்பில் 6 பேரும் தேமுதிக சார்பில் இரண்டு பேரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும், சுயேச்சையாக 7 பேரும் என மொத்தம் 50 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் இன்று திங்கட்கிழமை மாலை 3 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கிணத்துக்கடவில் 1-வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஒருவரும், நான்காவது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகம்மது யாசின் ஆகிய இரண்டு பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
இரண்டு மனுக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 48 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும், சுயாட்சி வேட்பாளருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு வருகிறது.