பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வேலூர் இப்ராஹிம், போத்தனூர் பகுதிக்கு செல்ல முயன்றார். அப்பொழுது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரச்சாரம் செய்ய தடை விதித்தனர்.
கோவை: வருகிற 19 அம தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் அனைத்து கட்சியினரும் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் இன்று அண்ணாமலை தலைமையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளர், வேலூர் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக வேலூர் இப்ராஹிம், போத்தனூர் பகுதிக்கு செல்ல முயன்றார். அப்பொழுது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உங்களுக்கு பி.எஸ்.ஓ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் நீங்கள் இந்த பகுதியில் பிரச்சாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

அதற்கு, வேலூர் இப்ராஹிம் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த நபர் வேட்பாளராக இருக்கிறார். நான் மாநில சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளராக இருக்கிறேன். நான் ஏன் செல்லக்கூடாது என்று கேட்டுள்ளார்.
வேட்பாளர் மட்டும் செல்ல அனுமதி என்று தெரிவித்த காவல்துறையினரிடம், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை கைது செய்து ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதனால் பாஜகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.