திருப்பூர் அருகே சூட்கேஸில் பெண் சடலம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை..!

உயிரிழந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே சூட்கேஸில் பெண் சடலத்தை கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் தாராபுரம் சாலை புதுரோடு பகுதியில் சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது தெரியவந்தது.

பின்னர், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...