காரமடை அருகே வனத்தில் மர்மமாக இறந்து கிடந்த யானையின் வயிற்றில் 7 மாத குட்டியானை

மர்மமான முறையில் இறந்து கிடந்த யானையின் வயிற்றில் 7-மாத குட்டி இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானைத் தந்தத்தால் குத்திய காயம் இருந்தது.



கோவை: மர்மமான முறையில் இறந்து கிடந்த யானையின் வயிற்றில் 7-மாத குட்டி இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் பில்லூர் அணை மானார் பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

ஆனால் யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முதுமலை யானைகள் முகாம் வடக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தோலம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் இறந்த யானையின் உடலைப் பார்வையிட்டு பரிசோதனை செய்தபோது யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 7 மாத கரு இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானைத் தந்தத்தால் குத்திய காயம் இருந்தது தெரியவந்தது.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் பெண் யானையின் உடல் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

வயிற்றில் குட்டியுடன் இருந்த பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...