கிணத்துக்கடவில் நாய் குறுக்கே வந்ததால் விபத்து: இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி

கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே மூலக்கடை பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் கோபால்சாமி(26), இவர் மயிலேரிபாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு சொக்கனூர் பகுதியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் கோபால்சாமி கிணத்துக்கடவு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கடை பகுதி அருகே வந்து கொண்டிருக்கும்போது நாய் குறுக்கே வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கோபால்சாமிக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு கோபால்சாமி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கோபால்சாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...