கோவையில் மயங்கி இருந்த யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை

கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை பெரியதடாகம் பகுதியில், மயங்கி இருந்த பெண் யானைக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை பெரியதடாகம் பகுதியில், பெண் யானை ஒன்று நேற்றைய தினம் மயங்கிய நிலையில், படுத்துக் கொண்டிருந்தது குறித்து வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு நேற்றிலிருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் யானையைச் சுற்றிலும் பந்தல் அமைக்கப்பட்டு குளுக்கோஸ் போடப்பட்டு பழங்கள், வெல்லம் கலந்து சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், யானையை எழுப்ப முயன்ற போது எழுந்து நிற்காததால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் இரத்தம், சாணம், ஆகியவை சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் அனைத்தும் சரியான நிலையில் உள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து யானைக்கு நீர் சத்தை அதிகரிக்கத் தொடர்ந்து, குளுக்கோஸ், பழங்கள், வெல்லம் கலந்த சூரண குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...