கோவை ஜே.எம்:6, நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும், மாவட்ட குற்றப்பிரிவில், வாரந்தோறும் திங்கள் கிழமை கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
கோவை: கோவையில் வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.7.4 லட்சம் மோசடி செய்த, ஸ்டேட் வங்கி பெண் ஊழியருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கப்பட்டது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றி வருபவர் கவிதா(32). இவர், பல்வேறு வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து, சட்டவிரோதமாக, ஏழு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, வங்கி மண்டல முதன்மை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி, வங்கி ஊழியர் கவிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.