கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 24 மணிநேரமும் தீயணைப்பு வாகன நிறுத்தி கண்காணிப்பு..!

கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பற்றும் நிலையில், 24 மணிநேரமும் தீயணைப்பு வாகன நிறுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.



கோவை அருகே உள்ள வெள்ளலூரில் குப்பை கிடங்கு உள்ளது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை மொத்தமாகக் கொட்டி அவற்றை பிரித்து அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில், தொடர்ந்து அடிக்கடி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு, சுவாசக்கோளாறு, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகி வருவதாக மக்கள் பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்து வந்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் இரவு முழுவதும் போராடி தீயை அணைத்தனர்.

இந்த நிலையில், மக்கள் கோரிக்கையை ஏற்று கோவை மாநகரம் தீயணைப்புத் துறை சார்பாக தற்காலிக தீயணைப்பு நிலையம் போல் அமைக்கப்பட்டு, 4 தீயணைப்பு வாகனங்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாலாபுறமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...