பொள்ளாச்சி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது..!

அம்பராம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஆனைமலை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக பையுடன் சென்று கொண்டு இருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த வஞ்சியப்பன் மகன் முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

போலீசார் விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தெரியவந்தது இதனை அடுத்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வைத்திருந்த முருகானந்தத்தை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...