பொள்ளாச்சி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளி கட்டையால் அடித்து கொலை..!

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய கொலையாளியை தேடி வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கூலித்தொழிலாளியை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (34), தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவர் சனிக்கிழமை திவான்சாபுதூர் அருகே தனியார் தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு சென்றார்.

இந்நிலையில், பணியை முடித்த பிறகு சனிக்கிழமை இரவு அதே தோட்டத்தில் தேங்காய் உறிக்கும் பணிக்கு வந்த உடுமலையை சேர்ந்த செல்வராஜ் (40) என்பவருடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், செல்வராஜ் மகாலிங்கத்தை கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது. இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மகாலிங்கத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர், மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள ஆனைமலை போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய செல்வராஜை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...