பொள்ளாச்சியில் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் இருசக்கர ஷோரூம் காசாளர் கைது..!

மேலும், வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்தது கணக்கு தணிக்கை செய்த போது தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் ரூ.3 லட்சத்தை கையாடல் செய்த தனியார் இருசக்கர ஷோரூம் காசாளரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சியில் ஒரு தனியார் இருசக்கர ஷோரூம் உள்ளது. இங்கு சேரன் நகர் பகுதியை சேர்ந்த இந்திரன் (30) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், ஷோரூமில் கணக்கு தணிக்கை செய்த போது ரூ.3 லட்சத்தை இந்திரன் கையாடல் செய்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் உரிமையாளர் பிரபு புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணி மேற்பார்வையில் ஆய்வாளர் ராம்தாஸ் தலைமையில் துணை -ஆய்வாளர் கவுதம் மற்றும் போலீசார் இந்திரனை தேடி வந்தனர்.

இதற்கிடையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சேரன் நகரில் வைத்து இந்திரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஷோரூமில் வரவு, செலவு கணக்கு விவரங்களை இந்திரன் கவனித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சத்தை வங்கியில் செலுத்தாமல் பணம் செலுத்தியது போல வங்கி செல்லானை தயார் செய்து கொடுத்து உள்ளார்.

பின்னர், கணக்கு தணிக்கை செய்த போது வங்கியில் ரூ.3 லட்சம் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து போலீசார் இந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...