கோவையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் சோதனையின் போது ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.13.11 லட்சம் பறிமுதல்.

கோவை கருமத்தம்பட்டி மற்றும் சுகுனாபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட மொத்தம் ரூ. 13.11 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து கருவூல அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே அரசுப் போக்குவரத்துப் பணிமனைப் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர், முத்துக்குமார் தலைமையில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது, ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியிலிருந்து வந்த கார் ஒன்றை நிறுத்திச் சோதனை சோதனை போது, காரை ஓட்டி வந்த சதீஷ்குமார், என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், முறையான ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய். 3.12 லட்சத்தை, கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர். மேலும், பணம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல மற்றொரு சோதனையின் போது, கோவை சுகுணாபுரம் மைல்கல் சோதனைச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முத்து தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாகனத்தில் வந்த கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணமணி என்பவரது வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டபோது, அதில், ரூபாய்9.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. 

உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்து, கருவூல அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...