கோவையில் கள்ளு இறக்கி விற்பனை செய்த 2 பேர் கைது

கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் சட்டவிரோதமாக கள்ளு இறக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு 20 லிட்டர்கள் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டியில் சட்டவிரோதமாக கள்ளு இறக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டு 20 லிட்டர்கள் கள்ளு பறிமுதல் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் தனியார் விவசாய தோட்டத்தில் தென்னை மரத்திலிருந்து கள்ளு இறக்கி விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல்நிலைய ஆய்வாளர் செந்தில் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை கொண்டம்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது கொண்டம்பட்டி நாகராஜ் மற்றும் கதிர்வேல் என்பவரின் தோட்டத்தில் சோதனை செய்த போது அங்கு தென்னை மரத்தில் கள்ளு இறக்கி விற்பனை செய்வது தெரியவந்தது.

பின்னர் அங்கு விற்பனை வைத்திருந்த 20 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...