கோவையில் தாலி தோஷம் இருப்பதாகக் கூறி பெண்ணிடம் நகை திருட்டு..!

தாலி தோஷம் என்று கூறி இரண்டரை பவுன் தங்க தாலி செயின் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் தாலி தோஷம் இருப்பதாகக் கூறி பெண்ணிடம் நகை திருடிய போலி சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் தேவேந்திர வீதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் சிவகுமார் (47).

இந்நிலையில், நேற்று காலை இவரது மனைவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் குறி சொல்லும் சாமியார் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்.

அப்போது, சாமியார் சிவகுமாரின் மனைவியிடம் உனக்கு தாலி தோஷம் உள்ளது என்றும், பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதனைக்கேட்டு பயந்து போன சிவக்குமாரின் மனைவி பூஜை செய்வதற்கு சம்மதித்தார்.

இதையடுத்து, கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க தாலி செயினை கழற்றி பூஜைக்காக கொடுத்துள்ளார். பூஜை செய்த சாமியார் எலுமிச்சம் பழம் ஒன்றை சிவகுமாரின் மனைவியடம் கொடுத்துள்ளார்.

பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை வாங்கி விட்டு தண்ணீர் எடுக்க சென்ற சிவகுமாரின் மனைவி மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த சிவகுமாரின் மனைவி குறி சொல்லும் சாமியார் காணாமல் போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

மேலும், அவரிடம் கொடுத்து இருந்த தங்க செயினையும் அந்த நபர் எடுத்துச் சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிவகுமார் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...