அதேபோல, இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கான யு.ஏ.என்., கடவுச்சொல் மூலம், தனிநபர் பிடித்தம் தொடர்பான எஸ்.எம்.எஸ்., பெற வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவு.
கோவை: கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்க தவறும் பட்சத்தில், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என தூய்மைப் பணி ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் சதீஷ்குமார் அனைத்து தூய்மை பணி ஒப்பந்ததாரர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கோவை மாநகராட்சி அனைத்து மண்டலங்கள் மற்றும் மைய அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவைப்படும் 'கிளவுஸ்', 'கட் ஷூ', ஒளிரும் ஆடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், கிருமிநாசினி, முகக்கவசம் வழங்க வேண்டும். இவற்றை வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தவறும் பட்சத்தில் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். அதேபோல, இ.எஸ்.ஐ., மற்றும் வருங்கால வைப்பு நிதி தொகைக்கான யு.ஏ.என்., எண் கோடு, கடவுச்சொல் மூலம், தனிநபர் பிடித்தம் தொடர்பான எஸ்.எம்.எஸ்., பெற வழிவகை செய்ய, தூய்மை பணியாளர்களின் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், மொபைல்போன் எண் விபரங்களை, அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.