அதிமுக வேட்பாளர்களை தேர்தல் பொறுப்பாளர்கள் வேண்டுமென்றே அலைக்கழிப்பதாக, கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் புகார்

அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையினரும் இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.


கோவை: அதிமுக வேட்பாளர்களை தேர்தல் பொறுப்பாளர்கள் வேண்டுமென்றே அலைக்கழிப்பதாக, கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், எம்.எல்.ஏ க்கள் அம்மன் கே.அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், அமுல் கந்தசாமி ஆகியோர் அவர்களது புகார் மனுவில், கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர்.

இதனால், அதிமுக வேட்பாளர்களை பல்வேறு காரணங்களை கூறி வேண்டும் என்றே அலைக்கழித்து வருவதாகவும், காவல்துறையினர் அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.



இதனால், கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், எனவே தேர்தல் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும், என்று கோரிக்கை வைத்தனர்.



அதனைத் தொடர்ந்து, அவர்களது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் தேவையற்ற காரணங்களைக் கூறி அதிமுக வேட்பாளர்களை வேண்டும் என்றே அலைக்கழித்து வருவதாகபும், காவல்துறையினர் திமுக கட்சியாகவே மாறி உள்ளனர் என்று விமர்சித்தார்.

மேலும், அதிமுக வேட்பாளர்களை நிராகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், தேர்தல் அதிகாரிகளும் காவல் துறையினரும் இத்தகைய போக்கை கைவிட வேண்டும், என கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலைப் பொருத்தவரை அதிமுக வெற்றி பெறும். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை தான் என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அதிகாரிகள் வேலை செய்வதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது என்னையும் சக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களையும் காவல்துறையினர் அழைத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அவர், யாரை மிரட்டியும் யாரும் வெற்றி பெற முடியாது என்றார்.

"மேலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஊரக உள்ளாட்சிகளில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்ற உறுதிமொழி ஆவணம் (Affidavit )வடிவில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைய விதிமுறைகளில் குறிப்பிடவில்லை.

அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கியில் புதிதாக வங்கிக்கணக்கு துவக்கப்பட்ட ஆவணம் வேட்புமனுவுடன் இணைந்து தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணைய விதிமுறைகளும், வேட்பாளர் வழிகாட்டி கையேட்டிலும் குறிப்பிடவில்லை.



வேட்பு மனு படிவம் 3ல் வேட்பாளர்களின் இன்சியல் பெயருக்கு முன்பாக போடக்கூடாது, பின்னால் தான் போட வேண்டும் என பல இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறது. இது தேர்தல் விதிமுறைகளில் குறிப்பிடப்படாத ஒன்று.

வேட்பாளர் வழிகாட்டி கையேடு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை தவிர வேறு எந்த ஆவண சான்றிதழ்களையும் இணைக்கத் வேட்பாளர்களை வற்புறுத்தக்கூடாது", ஆகிய கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...