கட்சிக்கு உழைத்த மகளிருக்கு சீட் இல்லை, ஆனால் நிர்வாகிகளின் மனைவிகளுக்கு சீட்டா..? அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தின் முன்பு திரண்ட திமுக மகளிரணியினர்

"திமுகவில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் உழைத்தவர்களுக்கு யாருக்குமே சீட் ஒதுக்கவில்லை ஆனால், கட்சிக்கு எவ்விதத்திலும் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டு.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மகளிருக்கு கவுன்சிலர் சீட் வழங்காததை கண்டித்தும், முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தின் முன்பு திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.



திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டு வேட்பாளர்கள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், மகளிர் அணியை சேர்ந்தவர்கள் தற்போது, கோவை அவிநாசி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தின் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"திமுகவில் 50% மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் உழைத்தவர்களுக்கு யாருக்குமே சீட் ஒதுக்கவில்லை ஆனால், கட்சிக்கு எவ்விதத்திலும் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் கணவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மனைவிக்கு சீட் என்று வழங்கப்பட்டுள்ளது, மிகுந்த வருத்தமளிக்கிறது இது முறையல்ல", என்று அங்கு கூடியிருந்த மகளிர் தெரிவித்தனர்.



கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி என்பதால், அவருடைய வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, கோவை திமுக மகளிர் அணியை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...