கோவையில் கீழே விழும் நிலையில் பழமையான மரம்: பொதுமக்கள் அச்சம்

ராஜ வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பழமையான மரம் விழும் நிலையில் உள்ளது. கீழே 8 மின் இணைப்பு லைன்கள் செல்வதால் மரம் விழுந்தால் மின் இணைப்புகள் சேதமடைந்து ரோட்டில் விழும் அபாயம் உள்ளது.


கோவை: ராஜ வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் பழமையான மரம் விழும் நிலையில் உள்ளது. கீழே 8 மின் இணைப்பு லைன்கள் செல்வதால் மரம் விழுந்தால் மின் இணைப்புகள் சேதமடைந்து ரோட்டில் விழும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-



கோவை ராஜவீதி மாநகராட்சி பார்க்கிங், நகர் நல மையம் மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி அருகே பழமையான மரம் ஒன்று வேர் பட்டுப்போய் விழும் நிலையில் உள்ளது.



பல நாட்களாக இந்த மரம் அப்புறப்படுத்தாமல் உள்ளது. கீழே 8 மின் இணைப்புகள் செல்கின்றன. தினமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் இப்பகுதியில் பல நாட்களாக அபாய நிலையிலுள்ள இந்த மரத்தைப் பாதுகாப்பான முறையில் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய விபத்து ஏதேனும் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...