கோவை திமுகவினரிடையே தொடரும் வார்டு ஒதுக்கீடு அதிருப்திகள்: 84-வது வார்டை திமுகவிற்கு ஒதுக்க ஆர்ப்பாட்டம்...!

கோவை கிழக்கு மண்டலம் 84 வது வார்டு திமுக கட்சியினருக்குத் தான் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்டோர் திமுகவினர் ஜி.எம் நகர் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, கோவையில் திமுக, அதிமுக, பாஜக போன்ற முக்கிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருகின்றனர். நாளை வேட்புமனு செய்யக் கடைசி நாள் என்பதால், மாநகராட்சி அலுவலகங்களில் கட்சியினர் குவிந்து வருகின்றனர்.

அதனையொட்டி, கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வார்டு வேட்பாளர்கள் ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை கிழக்கு மண்டலம் 84 வது வார்டு வேட்பாளராகக் கூட்டணி கட்சியினர் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அந்த வார்டு திமுக கட்சியினருக்குத் தான் வழங்க வேண்டும், என வலியுறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஜி.எம் நகர் சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், கட்சியினர் கலைந்து செல்லாத காரணத்தினால், காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட திமுகவினரைக் கைது செய்தனர்.



84 வார்டு திமுக பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த வார்டு எந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...