திமுக கூட்டணியில் இடம் ஒதுக்காததால் கண்ணம்பாளையத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி

சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளனர்.


கோவை: சூலூர், கண்ணம்பாளையம் பேரூராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட உள்ளனர்.

கண்ணம்பாளையத்தில் ஏற்கனவே 3 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் அக்கட்சியின் சார்பில் தலைவர் பதவிக்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தர மறுத்ததாலும், எதிர்பார்த்த இடங்கள் ஒதுக்காததாலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து கண்ணம்பாளையம் மக்கள் சேவை முன்னணி என்ற பெயரில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதன்படி கண்ணம்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 11 இடங்களில் மக்கள் சேவை முன்னணி போட்டியிட உள்ளது. தலைவர் பதவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாலதி என்பவர் போட்டியிடுகிறார். சூலூர் கண்ணம்பாளையத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியிலிருந்து விலகித் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...