கோவை உள்ளாட்சி தேர்தல் 2022: அதிமுகவின் மேயர் வேட்பாளர் என்று சொல்லப்படும் சர்மிளா சந்திரசேகர் 38 வது வார்டில் போட்டியிட வேட்பு மனு.

அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.


கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகங்களில் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.காலை முதலே, கோவையின் அனைத்து மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

பிப்ரவரி 4 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடியவுள்ள நிலையில், கோவை வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நாளை, பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யஇறுதி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதன்படி,, அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.



ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் சர்மிளா, அதிமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று

அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...