விசாரணையில் எர்ணாகுளத்திலுள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்வது தெரியவந்தது.
கோவை: கோவை - கேரள எல்லையான பாலக்காடு ரயில் சந்திப்பில் ஏசி பெட்டியில் பயணம் செய்த நபரிடம் சோதனையிட்டதில் ரூ. 54 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று சந்தேகத்துக்குரிய பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
இதில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏ.சி., பெட்டியில் வந்த ஒரு நபர் எவ்வித ஆவணங்களும் இல்லாமல், 1.224 கிலோ தங்க நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சங்ராம் (48) என்பதும், எர்ணாகுளத்திலுள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு விற்பனைக்குக் கொண்டு செல்வதும் தெரியவந்தது. மொத்தம் ரூ. 54 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான நபரை ஜி.எஸ்.டி., துறையினரிடம் ஒப்படைத்தனர்.