கோவையில் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு; மலர் தூவி மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அறிஞர் அண்ணாவின் திருவுரு படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே. ஆர். ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: தமிழகம் முழுவதும் இன்று பேரறிஞர் அண்ணாவின் 53 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது

தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணாவின் புகை படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொது இடங்களில் நிகழ்ச்சி நடைபெற தடை விதித்துள்ளதால், கட்சிஅலுவலகங்களில் அண்ணாவின் திருவுரு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அறிஞர் அண்ணா திருவுரு படத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே. ஆர். ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.



கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் உள்ள அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், இம்முறை அந்தந்த கட்சி அலுவலகங்களில் அவரது நினைவு தினம் எளிமையான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...