தனியார் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் மூலம் SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர், கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள், அரசு மருத்துவமனை முதல்வர்களின் விழிப்புணர்வு உரைகள் ஒளிப்பரப்பப்பட உள்ளன.


கோவை: கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் அரசாங்கத்துடன் இணைந்து அவர்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் வானொலி (சூரியன் எப்.எம்) மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் 3கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் ஒரு வாரத்திற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளது.

SMS (Soap, Mask, Social distance) என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், கோவை மாவட்ட ஆட்சியர்கள், கோவைமற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர்கள் பேசிய விழிப்புணர்வு உரைகள் ஒளிப்பரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...