கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இல்லை - மாவட்ட ஆட்சியர் தகவல்..!

தேர்தல் பணிகளுக்கிடையே கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தாலும் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளுக்கு இடையே கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9800 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4300 படுக்கை வசதிகள் உள்ளன.

அதே போல் 5,300 ஆக்சிஜன் படுக்கைகள், 129 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் மற்றும் 31 ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள் அனைத்தும் தயாராக உள்ளன. 24 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நான்கு மணி நேர சுழற்சி முறையில் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது சுமார் 10 முதல் 15 சதவீத படுக்கைகள் மட்டுமே சிகிச்சைக்காக நிரம்பியுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாகத் துவங்கியது.

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 பேரூராட்சிகள், 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 7 நகராட்சிகளில் 198 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 33 டவுன் பஞ்சாயத்துகளில் 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

கோவை மாநகராட்சியில் 1290 வாக்குச் சாவடிகளும், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகளும், 33 டவுன் பஞ்சாயத்துகளில் 632 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 2312 வாக்குச் சாவடிகளுடன் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்காக 41 தேர்தல் அலுவலர்களும், 110 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குச்சாவடி அலுவலர்கள் வீதம் சுமார் 10172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விதிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தேர்தலை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், நடத்துவதற்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் தருமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சமீரன் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே, தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மாவட்டத்தில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளுக்கு மத்தியில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எந்த சமரசமும் இன்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று குறைந்தாலும், தடுப்பு நடவடிக்கையை குறைக்கவில்லை. மேலும் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...