பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு பூங்கா கொரோனா காரணமாகக் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டு இருந்தது. நோய்த்தொற்று குறைந்து வருவதால், அரசு பூங்காவைத் திறக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து, இன்று முதல் ஆழியாறு அணை பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. பூங்கா திறக்கப்பட்டதால் பல்வேறு பகுதியிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு பூங்காவிற்குள் சென்று இயற்கை அழகைக் கண்டு ரசித்தனர்.
சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால், பூங்காவிற்குள் முக கவசம் அணிவது, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.