விசாரணையில் மாணவியின் தந்தை நடத்தி வரும் மளிகை கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் காய்களில் எலி மருந்து வைத்தது தெரியாமல் காய்கறியைச் சமைத்து சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே எலி மருந்து வைத்த காய்களைச் சமைத்துச் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையத்தை சேர்ந்தவர் தேவசித்து, அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி தேவ சித்துவின் மகளான கல்லூரி மாணவி எனிமா ஜாக்குலின் கடையிலிருந்த கேரட்டை எடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்த ஜாக்குலினை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் எனிமா ஜாக்குனின் தந்தை நடத்தி வரும் மளிகைக்கடையில் எலி தொல்லை அதிகமாக இருந்ததால் காய்களில் எலி மருந்து வைத்தது தெரியாமல் காய்கறியைச் சமைத்துச் சாப்பிட்டதால் தான் கல்லூரி மாணவி உயிரிழந்தாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.