ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத்

உலக ஈரநில தினத்தை முன்னிட்டு வனத்துறை சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: ஆறு குளங்களை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத் வலியுறுத்தியுள்ளார்.



உலக ஈரநில தினத்தை முன்னிட்டு கோவை மண்டல வனத்துறை சார்பில் ஈரநிலங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூர் பகுதியில் உள்ள சொட்டையாண்டி குளக்கரையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

இதில் கோவை மண்டல வன பாதுகாவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் குளங்கள் என்பது நமக்கு இயற்கையாகக் கிடைத்த வரம்.

அதனை நாம் பாதுகாக்க வேண்டுமெனக் கூறினார். மேலும் குளங்களில் கழிவுகள் சேராமல் தடுப்பதன் மூலம் நமக்குத் தேவையான நீரை இதிலிருந்து பெற முடியும் என்றும் குளம் நீண்ட நாட்களுக்குத் தண்ணீரைத் தேக்கி வைத்துத் திருப்பி அளிக்கக்கூடியது. அதனைப் பாதுகாக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் தன்னார்வலர்களின் பங்கு அதிகம் வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய முதுநிலை மூத்த விஞ்ஞானி பிரமோத், உலகில் 97% சதவீதம் கடல் நீர் தான் உள்ளது ஒரு சதவீதம் தான் நன்னீர் உள்ளதெனத் தெரிவித்தார்.



ஆறு குளங்கள் உயிர்ப்போடு இருந்தால் மட்டுமே மனிதர்கள் உயிர் வாழ முடியும் என கூறிய அவர் குழாயில் தண்ணீர் வந்தவுடன் நாம் குளத்தைப் பராமரிக்க மறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் நொய்யல் ஆறு தற்போது ஆறாக இல்லாமல் சாக்கடையாக உள்ளது என்றும் ஆறு குளங்கள் நமக்கு அழியாத சொத்துக்கள், அதனை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனத் துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



இதில் கோவை வனக் கோட்டம் சார்பில் ஈரநில பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், புகைப்பட வல்லுநர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கோவையைச் சார்ந்த விகடன் புகைப்பட கலைஞர் விஜய் எடுத்த பறவைகள் குறித்த புகைப்படம் இரண்டாம் பரிசை வென்றது. அவருக்குச் சான்றிதழ் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...