திருப்பூரில் தேர்தல் வைப்பு தொகையை நாணயங்களாக செலுத்திய வேட்பாளர்

திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 9-வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோதி மகேசுவரி தேர்தல் வைப்புத் தொகை 4000 ரூபாயை, 20 ரூபாய், 10-ரூபாய் நாணயங்களாகச் செலுத்தினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு நாளை மறுநாள் நிறைவடைய உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி 9 வது வார்டில் தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் ஜோதி மகேசுவரி என்பவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடத் தேர்தல் வைப்புத் தொகையாக 4000 ரூபாயைச் செலுத்த வேண்டும்.



இந்நிலையில் ஜோதி மகேசுவரி தனது வைப்புத் தொகையான 4000 ரூபாயை 20 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் ஆக மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் செலுத்தினார்.



இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்யச் சென்றார்.



மேலும், வேட்பாளர் கூறுகையில், பெரும்பாலான இடங்களில் பத்து ரூபாய் இருபது ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிவித்தும் வாங்குவதில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாணயங்களைத் திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து அரசும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி, சேலத்தில் கைது..!

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த மோசடி வழக்குக் கைதி பிம்முடு அஜித்குமார்,...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...