ஜவுளி துறை- விசைத்தறி உரிமையாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வி: கூலி உயர்வு தரும் வரை வேலை நிறுத்தம்

24 முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 25 வது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு தரும் வரை விசைத்தறிகளை இயக்க மாட்டோம் என போராட்ட குழு திட்டவட்டம்.


கோவை: 24 முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 25 வது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு தரும் வரை விசைத்தறிகளை இயக்க மாட்டோம் என போராட்ட குழு திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றனர்.

கோவை திருப்பூர் மாவட்டங்களில் கிராமப்புறங்களில் பிரதான தொழில் விசைத்தறி. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.

இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் எட்டு வருடங்களாக விசைத்தறி உரிமையாளர்களுக்குக் கூலி உயர்வு தரப்படாமல் இருந்தன. கூலி உயர்வு தர கோரி ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவுறுத்தினர்.

இந்தநிலையில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் கயல்விழி முன்னிலையில் நவம்பர் மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பல்லடம் ரகங்களுக்கு 20 சதவீதமும் சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதமும் கூலி உயர்வு தர வாய்மொழி ஒப்பந்தம் இடப்பட்டது.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாத துகிலியல் துறையினரைக் கண்டித்து ஜனவரி 9ஆம் தேதி முதல் இருபத்தி நான்காவது நாளாக விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நாள் ஒன்றுக்கு 60 கோடி ரூபாய் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இதுவரை 1,500 கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கி இருப்பதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்தநிலையில் கோவை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் முன்னதாக ஒப்பந்தமான இருபத்தி மூன்று சதவிகிதம் மற்றும் 20 சதவிகித கூலி உயர்வு தர கோரிக்கை வலுத்த நிலையில் 10 சதவீதமே உயர்த்தி தர ஜவுளி துறையினர் முன்வந்தனர்.

ஆனால் அது கட்டுபடியாகாது என்று தெரிவித்த விசைத்தறி உரிமையாளர்கள் 20 சதவீதத்திற்கு மேல் ஆகவே கூலி உயர்வு தர வேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்து பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினார்.

24 முறை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் 25வது பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு தரக் கோரியும் அதுவரை விசைத்தறி இயக்க மாட்டோம் என திட்டவட்டமாக போராட்டக்குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...