கோவையில் ஒரே நாளில் இரண்டு தனியார் ஏ.டி.எம் மையங்களில் 5-பேட்டரிகள் திருட்டு

கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் இருவேறு இடங்களில் உள்ள இரண்டு தனியார் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஐந்து பேட்டரியை திருடி தப்பிச்சென்றதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ஒப்பண கார வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரியை திருடி தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து, வங்கி மேலாளர் சரத் சந்திரன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் மையத்தில் பேட்டரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, வரதராஜபுரம் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இரவு இந்த வங்கி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 3- பேட்டரிகளை திருடி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, வங்கி மேலாளர் ராஜ்குமார் சிங்கம் வாளுக்கு போலீசில் புகார் செய்தார். அவரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...