காரமடையை அடுத்துள்ள சீலியூரில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வரும் கேரள ஓட்டுநர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கோவை: காரமடையை அடுத்துள்ள சீலியூரில் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள சீலியூர் அருகே மேடூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கைய கவுடர். இவரது மகன் சம்பத் (வயது 48). இவருக்கு சொந்தமாக உள்ள 2 ஏக்கர் விவசாய நிலத்தில் தென்னை மற்றும் வாழை பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பத் அவரது தோட்டத்தில் சட்டவிரோதமாகக் கஞ்சா வளர்த்து விற்பனை செய்வதாக ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு ஆய்வாளர் கமலி ஆனந்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, காரமடை போலீசாரின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தோட்டத்தினை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தோப்பில் சட்டவிரோதமாக சில கஞ்சா செடிகளை வளர்த்து அவரது தோப்பிற்கு தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வரும் கேரள டிரைவர்களுக்கு கடந்த சில மாதங்களாக விற்பனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சம்பத்தை காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில், சம்பத் சட்டவிரோதமாகத் தனது தோட்டத்திற்கு நடுவே சில கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததும், தேங்காய்களைக் கொள்முதல் செய்ய வரும் கேரள டிரைவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பத்தைக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 3 கிலோ அளவிற்குப் பச்சையான கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காரமடை போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
காரமடை அருகே விவசாய நிலத்தினுள் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.