கோவை கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு..!

இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, சுகாதாரத்துறை சார்பில் கோவை மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி கடந்த 30-ம் தேதி முதல் சுகாதாரத்துறை சார்பில் வரும் 13ம் தேதி வரை தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.



அதன்படி கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் வருவாய்த்துறையினர் அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகளில் தொழுநோய் எதிர்ப்பு தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தேசிய தொழு நோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமரிஅனந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, சுகாதாரத்துறை சார்பில் கோவை மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் கிணத்துக்கடவு தாலுகா அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...