நுண்துளை இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை: கேஎம்சிஹெச்‌ வெற்றிகரமாக செய்து சாதனை

புதுமையான மற்றும்‌ சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த கேஎம்சிஹெச்‌ இருதய நோய்‌ மருத்துவத்‌ துறை மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை தலைவர்‌ நல்லா ஜி பழனிசாமி பாராட்டுக்களைத் தெரிவித்தார்‌.


கோவை: புதுமையான மற்றும்‌ சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த கேஎம்சிஹெச்‌ இருதய நோய்‌ மருத்துவத்‌ துறை மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை தலைவர்‌ நல்லா ஜி பழனிசாமி பாராட்டுக்களைத் தெரிவித்தார்‌.

இருதய நோய்க்கான அறுவை சிகிச்சை முறையில்‌ டிரான்ஸ்கதீட்டர்‌ வால்வு ரீபிளேஸ்மெண்ட்‌ என்பது சமீபத்தில்‌ அறிமுகமான புதிய சிகிச்சை முறையாகும்‌. இம்முறையில்‌ நோயாளியின்‌ பழுதடைந்த இருதய வால்வுக்குப் பதில்‌ மாற்று வால்வை ஓபன்‌ ஹார்ட்‌ அறுவை சிகிச்சை இல்லாமல்‌ பொருத்துவார்கள்‌.

ஏற்கனவே பொருத்தப்பட்ட வால்வை மாற்றுவது என்பது மிகவும்‌ சிக்கலானதும்‌ அபாயம்‌ நிறைந்ததும்‌ ஆகும்‌. இதற்கு விரிவாகத் திட்டமிட வேண்டும்‌ என்பதால்‌ இதை அவசரக்கால சிகிச்சையாக மேற்கொள்வது மிகவும்‌ அரிதான விஷயமாகும்‌

பல்துறை மருத்துவமனைகளில்‌ முன்னோடியான கேஎம்சிஹெச்‌ மருத்துவமனையில்‌ அப்படிப்பட்ட சிக்கலான மற்றும்‌ அரிதான இருதய வால்வு மாற்ற அறுவை சிகிச்சை சமீபத்தில்‌ வெற்றிகரமாக செய்யப்பட்டது. 65 வயது மதிக்கத்தக்க நபர்‌ வயலில்‌ வேலை செய்துகொண்டிருந்தபோது ஒரு கனமான பொருளை தூக்கியுள்ளார்‌.

அப்போது அவருக்கு நெஞ்சுவலியும்‌ மூச்சுவிடுவதில்‌ சிரமமும்‌ ஏற்பட்டுள்ளது. இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PAM மற்றும்‌ ஸ்கேன்‌ எடுத்துப்‌ பார்த்தபோது முன்பு மாற்றியிருந்த வால்வில்‌ இரத்தக்கசிவு கண்டறியப்பட்டது, கனமான பொருளை சட்டெனத்‌ தூக்கும்போது சிலருக்கு இதுபோன்று ஏற்படக்கூடும்‌. இதுபோன்ற நோயாளிகளில்‌ சிலருக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு கூட அவகாசம்‌ இருக்காது.

நோயாளி மிகவும்‌ பாதிக்கப்பட்டிருந்ததாலும்‌ அவருக்குத் திரும்பவும்‌ ஒபன்‌ ஹார்ட்‌ சர்ஜரி செய்வது மிகவும்‌ ஆபத்தாய்‌ முடியும்‌ என்பதாலும்‌ அவருக்கு டிரான்ஸ்கதட்டர்‌ அயோர்டிக்‌ வால்வு பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது, இந்த முறையில்‌ அவரது மார்பைத் திறக்கத்‌ தேவையில்லாமலும்‌ அல்லது ஹார்ட்‌ லங்‌ இயந்திரம்‌ பயன்படுத்தாமலும்‌ தொடையில்‌ ஒரு சிறுதுளை மூலம்‌ முன்பிருந்த வால்விலேயே ஒரு புதிய வால்வு பொருத்தப்படும்‌.

கேஎம்சிஹெச்‌ இருதய நோய்‌ நிபுணர்கள்‌ டாக்டர்‌ தாமஸ்‌ அலெக்ஸாண்டர்‌, டாக்டர்‌ பாலகுமரன்‌ மற்றும்‌ டாக்டர்‌ பிரசாந்த வைஜ்யநாத்‌ ஆகியோர்‌ உடனடியாக செயல்பட்டு இந்த சிகிச்சையை 2 மணி நேரத்தில்‌ வெற்றிகரமாகச் செய்துமுடித்தனர்‌. நோயாளிக்கு அடுத்த நாளே வெண்டிலேட்டர்‌ அகற்றப்பட்டது, நான்காவது நாள்‌ அவர்‌ டிஸ்சார்ஜ்‌ செய்யப்பட்டார்‌.

இந்தப்‌ புதுமையான மற்றும்‌ சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்த கேஎம்சிஹெச்‌ இருதய நோய்‌ மருத்துவத்‌ துறை மருத்துவ நிபுணர்களுக்கு கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை தலைவர்‌ மற்றும்‌ நிர்வாக இயக்குனர்‌ டாக்டர்‌ நல்லா ஜி பழனிசாமி அவர்கள்‌ தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்‌ கொண்டார்‌.

நோயாளிகளின்‌ விலைமதிப்பற்ற உயிர்காத்திட கேஎம்சிஹெச்‌ அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொள்ளும்‌ என்றும்‌ இதுபோன்ற புதுமையான மற்றும்‌ சிக்கலான சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்வதில்‌ கேஎம்சிஹெச்‌ மருத்துவமனை முன்னோடியாகத்‌ திகழ்கிறது என்றும்‌ குறிப்பிட்டார்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...