பரபரக்கும் கோவை தேர்தல் களம்: மக்கள் நீதி மய்யம் சார்பில் 11-பட்டதாரி பெண்கள் வேட்புமனு தாக்கல்

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 6 மாத கர்ப்பிணி பெண் உட்பட பட்டதாரி பெண்கள் என 11 பேர் இன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.


கோவை: கோவையில் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் 6 மாத கர்ப்பிணி பெண் உட்பட பட்டதாரி பெண்கள் என 11 பேர் இன்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.



தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதில் கோவை மநீம கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக மனு தாக்கல் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பட்டதாரி பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 13 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று கோவை உள்ள ஆர்எஸ்புர‌ம் ப‌குதியில் உள்ள‌ மேற்கு ம‌ண்ட‌ல அலுவ‌லக‌ம் ப‌குதியில் ம‌க்க‌ள் நீதி மய்ய‌ம் க‌ட்சியைசேர்ந்த‌ 11 பேர் வேட்பு ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌ன‌ர்.



அதில் 6 மாத‌ கால‌ க‌ர்ப்பிணி பெண்ணான‌ ந‌ந்தினி என்ப‌வ‌ர் 40 ஆவது வார்டுக்கான‌ வேட்பு ம‌னுவை தாக்க‌ல் செய்தார். பி.எ ப‌ட்ட‌தாரியான இவ‌ர் இது அடுத்த‌ த‌லைமுறைக்கான‌ மாற்ற‌ம் என்று கூறினார்.

இதே போல் மத்திய மண்டலத்தில் 63 ஆவது வார்டில் போட்டியிடப் பட்டதாரி ரம்யா வேணுகோபால் உள்ளிட்டோரும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அவர் கூறும் போது கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் போது அனைத்து பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

அதே பாணியில் தேர்தலுக்கு முன்பிருந்தே மநீம கட்சியினர் வார்டு வாரிய சென்று பிரச்சனைகளைக் கேட்டறிந்தோம், எனவே நிச்சயமாக மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...