கோவை 63வது வார்டு பகுதியில் கவுன்சிலர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் ரம்யா வேணுகோபால் வேட்புமனு தாக்கல்..!

மேலும், தான் வெற்றியடையும் பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனையான குப்பை கழிவுகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு தொகுதியின் 63வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ரம்யா வேணுகோபால் போட்டியிடுகிறார்.



தெளிவான செயல் திட்டத்துடன் முன்னெடுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரச்சாரத்தின் மூலம் கோவை 63வது வார்டு பகுதியில் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளதாக அக்கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



இதனைத்தொடர்ந்து, தன் பிரச்சாரத்தை அவர் தீவிரப்படுத்தி வரும் நிலையில் தனது வேட்புமனுவை கோவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;

63வது வார்டு பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும், தான் வெற்றியடையும் பட்சத்தில் அப்பகுதியில் இருக்கும் முக்கிய பிரச்சனையான குப்பை கழிவுகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

63வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு, தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தீர்வு காண பணி செய்வேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...