அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிக்காததால் வேட்புமனு தாக்கல் மந்தம் - கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடியது..!

இதுவரை கிணத்துக்கடவு பேரூராட்சி 13 வார்டில் போட்டியிட சுயேட்சையாக ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


கோவை: அரசியல் கட்சியினர் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

வரும் பிப்ரவரி 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தினமும் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

இதனால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடந்த 3 நாட்களாக யாரும் வரவில்லை. இன்றும் யாரும் வராததால் கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதுவரை கிணத்துக்கடவு பேரூராட்சி 13 வார்டில் போட்டியிட சுயேட்சையாக ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தால் தான் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...