கோவையில் மாநகராட்சி பொறியாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இராமநாதபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் நீர்தேக்க தொட்டி அமைக்க ஒப்புதல்..!!

பொறியாளர் கோபால கிருஷ்ணா இன்று பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்களை சந்தித்து திட்டத்தினை பற்றிய தெளிவுரையை வழங்கினார்.


கோவை: கோவையில் மாநகராட்சி பொறியாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் இராமநாதபுரம் அரசுப்பள்ளி மாணவர்கள் நீர்தேக்க தொட்டி அமைக்க ஒப்புதல் தெரிவித்தனர்.

கோவை இராமநாதபுரம் அரசுப்பள்ளி மைதானத்தில் மேல்நிலைத்தொட்டி அமைக்கும் பணி துவங்கியதை அடுத்து தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்த்து வரும் நிலையில், அரசியல் கட்சியினை சார்ந்த பலரும், இந்தியா மாணவர் சங்கம் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவந்தனர்.

கடந்த ஞாயிறு அன்று போராட்டங்கள் நடத்திய எட்டு மாணவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் சட்ட விரோதமாக ஒன்றுகூடுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர்.

கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிலையில் அன்று 2000 மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது சுமார் 493 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பணிகளை மேற்கொள்ளும்போது அந்தப் பள்ளியில் இருந்த பல்வேறு மரங்களை வேரோடு வெட்டி சாய்த்து உள்ளார்கள். தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானம் பெரிய அளவில் பாதிப்பு அடைகிறது. இதனால் மாணவர்களின் விளையாட்டு திறமைகள் பாதிப்புக்குள்ளாகிறது.

எனவே, பள்ளி மைதானத்தில் அமையவிருக்கும் மாநகராட்சி தண்ணீர் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைத்து பள்ளி மைதானத்தை பாதுகாக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் இது போன்று விளையாட்டு மைதானத்துடன் பள்ளி எங்கும் அமையவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில், இந்த பள்ளியில் அமையப்பெற்ற விளையாட்டு மைதானத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் நீர்தேக்க தொட்டியை மாற்றி அமைத்திடவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை கோவை மாநகராட்சியில் மாணவர்கள் மனு அளித்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு உட்பட்டு அரசு அதிகாரிகள் இன்று பள்ளிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தனர்.

அதன்படி, பொறியாளர் கோபால கிருஷ்ணா இன்று பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்களை சந்தித்து திட்டத்தினை பற்றிய தெளிவுரையை வழங்கினார். இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் பொறியாளர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் பள்ளி மாணவர்கள் நீர்தெக்க தொட்டி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...