தேர்தல் பார்வையாளரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்திற்கு பெண் தேர்தல் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் மாவட்டம் வாரியாக இந்திய தேர்தல் ஆணையம் பார்வையாளர்கள் நியமித்ததுபோல், உள்ளாட்சி தேர்தலிலும் பார்வையாளர்களை, மாநில தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.
இதில், சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரித்து, மூன்று பார்வையாளர்களை நியமித்திருக்கிறது. மொத்தம், 40 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டத்துக்கு, மரியம் பல்லவி பல்தேவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான, 4ம் தேதி அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, தேர்தல் கண்காணிப்பு பணியை துவங்க வேண்டும் எனவும் தேர்தல் பார்வையாளரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.