கோவில்பாளையம் அருகே மதுபாட்டில்கள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.

அன்னூரை அடுத்துள்ள கோவில்பாளையம் பகுதியில் தனி வட்டாட்சியர், மேரி வினிதா தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது காரில் கடத்தி வரப்பட்ட 11 அட்டைப்பெட்டிகள் நிறைய மதுபாட்டில்கள் பறிமுதல்.



கோவை :கோவில்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கோவில்பாளையம் பகுதியில் தனி வட்டாட்சியர், மேரி வினிதா தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்த போது, காரில் 11 அட்டைப்பெட்டிகள் நிறைய மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறப்படுகிறது.



இதனையடுத்து, அந்த 11 அட்டை பெட்டியில் உள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டம் பத்திரிக்குடி மேலத்தெருவை சேர்ந்தபிரபாகரன் (வயது 25) என்பவரை பிடித்து கோவை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம், கோவில்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...